பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் பயணிகள் ரயிலை இனி 130 கி.மீ வேகத்தில் இயக்க போவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பில், ஜோலார்பேட்டை-சேலம்-கோவை இடையே 2024 மார்ச்சுக்குள்ளும், எழும்பூர்-விழுப்புரம்-திருச்சி இடையே 2025-26 நிதியாண்டுக்குள்ளும், திருச்சி-மதுரை-நெல்லை-நாகர்கோவில் இடையே 2026-27 நிதியாண்டுக்குள்ளும் ரயில்களின் வேகத்தை 130 கி.மீ. ஆக அதிகரிக்க முடிவு என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.