தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி,  கோதுமை, பருப்பு, சர்க்கரை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக கோடிக்கணக்கான மக்களும் பயன்பெறுகிறார்கள். இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலமாக கேழ்வரகு விநியோகம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நீலகிரி மாவட்ட த்தில் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் கோதுமை நுகர்வு அதிகரித்துள்ளதால் கூடுதலாக மாதம் 15,000 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்க வேண்டும் என்று மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கேட்டுள்ளதாக கூறியுள்ளார். அதேபோல மாநிலம் முழுவதும் கேழ்வரகு, ராகி போன்றவற்றை ரேஷன் கடைகள் மூலமாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.