பொதுத்தேர்வு எழுதும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்னல் மார்க் அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரையும், செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  11ஆம் வகுப்பு மார்ச் 4 முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 11 , 12 ஆம் வகுப்புகளுக்கான பாட வாரியாக அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி 80%க்கு மேல் வருகை பதிவுக்கு 2 மார்க், 75% முதல் 80% வரை இருந்தால் 1 மார்க் வழங்க வேண்டும். இலக்கிய மன்றம், மரம் வளர்த்தல், சாரண சாரணியர் இயக்கம் போன்ற 33 செயல்பாடுளில் 3ல் பங்கேற்றால் 2 மார்க்; ஒப்படைவு/செயல் திட்டம்/களப்பயணத்திற்கு 2 மார்க் வழங்க வேண்டும்.