அரசின் பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட வேண்டும் என   உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த சையத் அலி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால்,  எங்கள் பகுதியில் உள்ள பொது பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்,  அங்கு ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு,  ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே இந்த கோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசு 2014 இல் ஆக்கிரமிப்புகளை அகற்ற கண்காணிப்பு குழு அமைத்தது.  இதன் தலைவராக மாவட்ட கலெக்டர் நியமித்தது. இதற்காக மாநில வழிகாட்டுதல்குழு தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் உள்ளனர்.

மாதம் தோறும் இக்குழு கூடி,  நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் ஆக்கிரமிப்பு குறித்து புகார்கள் விசாரிக்கிறது. அந்த வகையில் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு குறித்து நோட்டீசை பெறுபவர்கள்,  தகுந்த அதிகாரி முன் ஆஜராகி தங்களது விளக்கத்தை கொடுக்க வேண்டும். பூமி மனித வாழ்க்கைக்கு அனைத்தையும் வழங்குகிறது. அது  பேராசையை திருப்திப்படுத்த அல்ல. பேராசைக்காரர்கள் அரசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் நெடுஞ்சாலை நிலங்களை ஆக்கிரமித்து….. பொது நிலங்களை பயன்படுத்த அடிப்படை உரிமைகளை மீறுகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுச் சொத்துக்கள், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் மக்களின் நலனுக்காக பாதுகாக்கப்படுவதையும்,  பொதுமக்கள் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதி செய்வது அரசின் கடமையாகும். பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் ஆதாயத்தை பெற்றுக்கொள்ளும் பேராசை பிடித்தவர்கள்,  போலி ஆவணங்களை உருவாக்கி அரசு சொத்துக்களை பட்டா வழங்கும், விபரீதமான சூழ்நிலையும் உள்ளது.

சமீப காலமாக நிலங்களின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்து வருவதால்,  பேராசை பிடித்த மனிதர்கள் வருவாய் துறை மற்றும் இதர அரசு துறையின் அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதும் அதிகரிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் முறியடிக்கப்படுவதுடன்,  மக்களை நலனுக்காக அரசு சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும்.  அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலத்தை அபகரிப்பது திருட்டுதான். எனவே இது இந்திய தண்டனை சட்டத்தின் மட்டுமல்லாது,  பிற சட்டங்களின்படியும் குற்றமாகும்.

சமூகத்தில் செல்வாக்கு மிக்க சில நபர்கள் நிலத்தை அபகரிக்க…. சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதால்,  பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அரசு உத்தரவின்படி மாநில வழிகாட்டுதல் குழு மாதத்தில் ஒருமுறை தவறாமல் கூடி, செயலாளர்கள் கூட்டத்துடன் பிரச்சனைகளை விவாதித்து எடுத்துக் கொள்ள வேண்டும். புகார்கள் மீதான நடவடிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.  ஆக்கிரமிப்புகளை அகற்றி,

அரசு சொத்துக்களை பாதுகாப்பதில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாலோ, கடமை தவறினாலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 வாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தவறினால்,  மனுதாரர் மீண்டும் இந்த கோர்ட்டை நாடலாம். அதன்படி மனுதாரர் தெரிவிக்கும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என  முக்கிய தீர்ப்பு நீதிபதிகள் வழங்கி உள்ளனர்.