தமிழகம் முழுவதும் இன்று  மற்றும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினம் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் டாஸ்மாக், அயல்நாட்டு மதுபான வகைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் ஆகியவை இயங்கக் கூடாது. கள்ளச் சந்தையில் விற்பனை செய்யக்கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.