தமிழகத்தில் ஆடி மாதம் என்றாலே அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரும். அதில் முக்கியமான நாட்களில் ஒன்றுதான் ஆடி 18 என்ற ஆடிப்பெருக்கு விழா. ஆடி மாதம் 18 ஆம் நாளன்று நல்ல காரியம் செய்தால் அது மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதனால் அன்றைய நாளில் புது வீடு, நிலம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் அரசு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

அதன்படி ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு அதிகமான ஆவணங்கள் பதிவுக்கு வரும் என்பதால் பொதுமக்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு மற்றும் ஆடிப்பெருக்கு போன்ற நாட்களில் அதிக மக்கள் பத்திரப்பதிவு செய்ய விரும்புவதால் அரசு விடுமுறையாக இருந்த ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் அனைத்தும் இயங்கும் எனவும் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.