தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் அனைத்து நாட்களிலும் திறந்து இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு இன்று கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 578 ரேஷன் கடைகளுக்கும் 2.64 லட்சம் மெட்ரிக் டன் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.