இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கும் பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, வாரத்தின் இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் முன்னரே வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை சேர்த்து எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் மொத்தம் ஏழு நாட்கள் வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • செப்டம்பர் 6  : ஜென்மாஷ்டமி
  • செப்டம்பர் 7  : ஜென்மாஷ்டமி
  • செப்டம்பர் 9  : இரண்டாவது சனிக்கிழமை
  • செப்டம்பர் 17 : ஞாயிறு
  • செப்டம்பர் 19  : விநாயகர் சதுர்த்தி விடுமுறை
  • செப்டம்பர் 23   : நான்காவது சனிக்கிழமை
  • செப்டம்பர் 28 (வியாழன்) : ஈத் இ மிலாத் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை