தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த கல்வியாண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு கல்வி இடைநிற்றல் காரணமாக அதிக அளவிலான மாணவர்கள் கல்வியை தொடரவில்லை.

இதனால் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு துணைத்தேர்வுக்கு போதிய ஏற்பாடுகளை செய்து மாணவர்களை தேர்வு எழுத தூண்டியுள்ளது. இந்த நிலையில் இந்த வருடம் பொது தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அட்டவணை டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போல இல்லாமல் நடப்பு ஆண்டு போதிய வருகை பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கடந்த கல்வி ஆண்டில் எமிஸ் வருகை பதிவை கொண்டு இந்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.