தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடம் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற பிரிவை சேர்ந்தவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு எதுவும் கிடையாது.

இந்த திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்தோறும் 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 400 ரூபாயும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாயும் மாதம் தோறும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750 ரூபாயும், பட்டதாரிகளுக்கு ஆயிரம் ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெறலாம் அல்லது என்ற வேலைவாய்ப்பு துறை இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.