தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளையூரணி ராமதாஸ் நகரில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருந்துள்ளார் இவருக்கு ஸ்டெல்லா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக மாரிமுத்து முப்பந்தல் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாரிமுத்து டெம்போவில் நாகர்கோவில் சென்று விட்டு கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த டெம்போ தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மாரிமுத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.