தமிழகத்தின் மக்கள் அனைவராலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் விநாயகர் சதுர்த்தி. இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பழனியில் பல்வேறு அமைப்புகளால் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை ஒரே நாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரணையின் போது சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத விதமாக அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி ஒருவடம் நடத்திக் கொள்ளலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விநாயகர் ஊர்வலத்தால் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
