தமிழகத்தில் மின்வாரியத்தால் கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி வீட்டு பிரிவு நுகர்வோர் ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு ஒருவர் பெயரில் மாற்றம் செய்வதற்கும் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவும் கட்டணம் செலுத்தி அன்றே பெயர் மாற்றம் வழங்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்கள் தவிர அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை மட்டுமே சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த முகாம் நடைபெற்று வரும் நிலையில் 708 ரூபாய் கட்டணம் சமர்ப்பித்து மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.