தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆகஸ்ட் 26ம் தேதி புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியிலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்வி சான்றுகளில் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை கட்டாயம் எடுத்து வர வேண்டும் எனவும் இந்த முகாம் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.