மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, திமுக அரசு  மாநிலத்தில் ஆட்சி  அதிகாரத்தில் இருக்கும் போதே மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். 13 ஆண்டு காலம் திமுகவை சேர்ந்த எம்பிகள்… மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற போது கச்சத்தீவை மீட்க ஞாபகம் வரவில்லை. கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முயற்சி எடுக்கவில்லை. இப்போது இன்றைய முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் அவருடைய ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டது  திமுக ஆட்சி எப்போது அகழும் என்று ஒரே குரலை மக்கள் எழுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த கச்சத்தீவின் அடிப்படையில் தான் மீனவர்களிடத்தில் வாக்குகளை பெறுவதற்காக…. கவர்ச்சிகரமாக பேசி,  மீனவர்களை ஏமாற்றி, கச்சத்தீவை மீட்போம் என்று ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு இருக்கின்றார். 13 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் மத்தியிலே இருந்து ஏன் நீங்கள் கச்ச தீவை மீட்க வில்லை. இந்திய நாட்டிற்கும் – இலங்கை நாட்டிற்கும் கச்சத்தீவு ஒப்பந்தம் ரத்து செய்வதற்கு ஏன் முயற்சி செய்யவில்லை ? நாட்டு மக்கள் கேட்கின்றார்கள் என தெரிவித்தார்.

நான் ஒரு சாதாரண தொண்டன். ஒரு தொண்டன் போல இந்த கட்சிக்கு இருந்தால் எம்எல்ஏ ஆகலாம், எம்பி ஆகலாம், அமைச்சராகலாம், ஏன் முதலமைச்சர் ஆகலாம், ஒரு கிளை செயலாளராக இருந்து மந்திரி பொறுப்பிற்கு வந்து மாவட்ட பொறுப்பிற்கு வந்து மாநில பொறுப்பிற்கு வந்து இப்போது கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மேடையில் வைத்திருக்கின்ற மூத்த தலைமைக் கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கழக ஒட்டுமொத்த நிர்வாகிகளோடு பொதுச்செயலாளராக வந்திருக்கிறேன்.

வேறு எந்த கட்சியிலாவது முடியுமா ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகக் கட்சியில் தான் உழைக்கின்ற சாதாரண தொண்டன் கூட தலைமைக்கு விசுவாசமாக இருக்கிற தொண்டன் கூட உச்ச வெச்ச  பட்ச பதவிக்கு வர முடியும். அதுதான் அண்ணா திமுக. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வீர வரலாறு இன்றைக்கு பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றது. இந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு இன்றைக்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன என தெரிவித்தார்.