தமிழக அரசு “மகளிர் உரிமைத் தொகை” திட்டம் மூலம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. இந்த தொகை பெண்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. தற்போது ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத்திட்டத்தின் பயனாளர்களாக இருந்து வருகின்றனர்.
ஆனால், புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்களை இணைப்பதற்குத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்கிற பெண்களில் பலர் விண்ணப்ப நிலைத் தெரியாமல், ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது இல்லாத தகவலால் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையில் தமிழக அரசாங்கம் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்” வழியாக விடுபட்ட பெண்களுக்கு முன்பதிவு செய்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தை ஏற்கும் என்று அறிவித்துள்ளது. இந்த முகாம்கள் கடந்த ஜூலை 15 அன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன, இந்த முகாம்கள் நவம்பர் வரை தொடரப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு முன்னதாக புதிய மகளிர்களுக்கு விண்ணப்பத்தொகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களில் தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுவதால் இன்று புதிய மகளிருக்கு மகளிர் தொகை குறித்து அறிவிப்பு வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதற்காக ஏராளமான பெண்கள் காத்திருப்பதால் இன்று அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் தெரிய வரும்.
