தமிழகத்தில் பூரண மதுவிலக்கு திமுகவின் அடிப்படை லட்சியம் என்றும், மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பது நிச்சயம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அவர் இந்த கருத்தை வலியுறுத்தும்போது, 2016ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என கூறியதனால் திருப்பூர், கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர், சமீபத்திய தேர்தலில் திமுக பூரண மதுவிலக்கை வாக்குறுதி அளிக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்ற முடிவை மட்டுமே எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.