சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசும் போது மாறி மாறி இருவரும் ஒருவருக்கொருவர் புகழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது சீமான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அண்ணாமலையை புகழ்ந்து பேசினார். இது குறித்து அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் செல்லும் நிலையில் ஒவ்வொரு முறையும் அவர் தமிழ் மொழியை பற்றி பெருமையாக பேசுகிறார். செல்லும் இடமெல்லாம் தமிழ் மொழியின் பெருமையை உயர்த்தி பிடிக்கிறார்.
தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி இருக்கிறது. அந்த கட்சி வளர்ச்சி அடைகிறது என்பதை தன்னுடைய செயல்களால் நிரூபித்துக் காட்டியவர் அன்பு இளவல் அண்ணாமலை என்றார். அதேபோன்று மும்மொழி கொள்கை கொள்கையில் தமிழ் மொழியின் அவசியம் பற்றிய சீமான் எடுத்துரைத்தார். மேலும் எப்போதுமே தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவேன் என்று சீமான் கூறி வரும் நிலையில் சமீப காலமாக அவர் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இந்த நிலையில் இன்று அண்ணாமலையை எவர் புகழ்ந்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
