தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்கள் வழியே குறும்படம் தயாரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக இல்லம் தேடி கல்வி மையங்கள் ஓராண்டுக்கு மேல் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன்களை வெளிக் கொணரும் விதமாக குறும்பட கொண்டாட்டம் நடத்தப்படுகின்றது. இந்த மாதம் சிட்டுக்களின் குறும்படம் என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் மூலமாக மூன்று நிமிட குறும்படம் தயாரிக்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல், எனது ஊர், தன் சுத்தம் மற்றும் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் குறும்படம் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு மையம் ஒரு குறும்படத்தை மட்டுமே தயாரிக்க வேண்டும். வட்டார அளவில் ஐந்து சிறந்த குறும்படங்கள் அவற்றில் இருந்து மாவட்டங்களில் ஐந்து சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்படும். இதனை விரைந்து முடித்து மாவட்ட அளவில் தேர்வான படங்களை மார்ச் 3-ம் இல்லம் தேடி கல்வித் திட்ட மாநில அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.