தமிழகத்தில் மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இளைய சகோதரர் க.மணிவண்ணன் சென்னையில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கடைசி மூச்சு வரை திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த இவர் முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்தவர். கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோருடன் மிக நெருக்கமாக இருந்தவர். இவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.