தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் 3,240 பார்களில் தீபாவளி திரளான மக்கள் மது வாங்கி விழாவை கொண்டாடியுள்ளனர். சாதாரண நாள்களில் டாஸ்மாக் கடைகள் ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மதுவிற்பனை செய்தாலும், வார இறுதி நாட்களில் அது ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை அதிகரிக்கிறது. பண்டிகை காலங்களில் இந்த விற்பனை மேலும் 15 சதவீதம் உயர்கிறது.
கடந்த ஆண்டு தீபாவளியில் ரூ.438 கோடி மதுவிற்பனை செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ரூ.600 கோடி என்ற இலக்கையும் தாண்டி ரூ.789 கோடியே 85 லட்சம் மதுவிற்பனை பதிவானது.
அதன் படி 18-ந் தேதி: ரூ.230 கோடியே 6 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக். 19-ந் தேதி: ரூ.293 கோடியே 73 லட்சத்துக்கும், தீபாவளி (நேற்று): ரூ.266 கோடியே 6 லட்சத்துக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக அதிகபட்ச மதுவிற்பனை: மதுரை: ரூ.170 கோடியே 64 லட்சம, சென்னை: ரூ.158 கோடியே 25 லட்சம், திருச்சி: ரூ.157 கோடியே 31 லட்சம், சேலம்: ரூ.153 கோடியே 34 லட்சம், கோவை: ரூ.150 கோடியே 31 லட்சம்
மேலும் ஏராளமான மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் மதுவை அதிக அளவில் வாங்கியதால் இந்த ஆண்டு விற்பனை ரெக்கார்டை கடந்துள்ளது.
