தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் மதமாற்றம் செய்து ஆப்கானிஸ்தான் சிறையில் அடைத்து தன்னை ஒரு ஐஎஸ் பயங்கரவாதியாக மாற்றிவிட்டதாக ஹீரோயின் கூறுகிறார்.   இந்த படம்  கேரள மாநிலத்தை தவறான முறையில் சித்தரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இயக்குநர் சுதீப்டோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்  தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள தியேட்டர்களில் மட்டும் வெளியான நிலையில்  படம் நாளை முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளன. கேரள பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் முஸ்லிம் பெண்கள் மீதான வன்மத்தை உமிழ்வதாக விமர்சிக்கப்படுகிறது. படம் திரையிட எழும் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை & பெரிய வசூல் இல்லாததால் திரையிட வேண்டாம் என உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்