சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெகாத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை சார்பாக Decathlon 10K Run ஓட்டம் இன்று நடைபெற உள்ளது. இதனால் அதிகாலை 3 மணி முதல் காலை 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி போர் நினைவிடத்திலிருந்து திரு வி கா பாலம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. பாலத்தில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் ML பூங்காவில் திருப்பி விடப்படும். கொடி மரச்சாலை மற்றும் அண்ணாச்சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.