தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்விநியோக விதிகளில் அடிக்கடி பல புதிய திருத்தங்களை செய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்து புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஏழு நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு கொடுக்காத நுகர்வோருக்கு அபராதம் விதிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்காத பட்சத்தில் விண்ணப்பதாரருக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதனைப் போலவே பழுதடைந்த மீட்டர்களை 7 நாட்களுக்குள் மாற்றாத நுகர்வோர்களுக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு கட்டாயமாக தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டு இருந்தால் நுகர்வோருக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.