தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாடத்திட்டத்துடன் சேர்த்து தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறன் படிப்புகளை வழங்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். மாணவர்களுக்கு தொழில்நுட்பத் திறன் பயிற்சி வழங்குவதன் காரணமாக அதிகபட்சமாக வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுவதற்கான வேலைவாய்ப்புகளையும் மாணவர்கள் பெற்று வருகிறார்கள்.

அதேசமயம் பொறியியல் கல்லூரிகளில் இந்த திட்டத்தின் கீழ் Microsoft, autodesk, Infosys உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம் மூலம் கிட்டத்தட்ட 63 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த பயிற்சியின் மூலம் வேலை கிடைத்துள்ளது. அதேசமயம் பல முன்னணி நிறுவனங்களுடன் சேர்ந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்று தருவதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.