தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி வேலூர் மாவட்டம் டி கே எம் மகளிர் கலை கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம். 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் இலவசமாக நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள்  0416 – 2290042 மற்றும் 9499055896 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது