தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதன் பிறகு இன்று தமிழகத்தில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு வருகிற 9-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.