தருமபுரி: பாலக்கோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாலக்கோடு, சுகர்மில், எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லும்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, தப்பைமதகிரி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை மற்றும் சுற்றப்புறபகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கடலூர்: செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை, கருவேப்பம்பாடி, தீர்த்தனகிரி, பூவாணிக்குப்பம், தானூர், சிறுபாலையூர், செம்மங்குப்பம், வைரங்குப்பம், பூண்டியாங்குப்பம், மேட்டுப்பாளையம், காயல்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம், ஆலப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தென்காசி: கடையநல்லூர் துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிளில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்க்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிக்குறிச்சி, நயினாரகரம், சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

சிவகங்கை: தேவகோட்டை துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பீட்டர்ஸ் காலனி, டிஎஸ்பி ஆபிஸ், தாலுகா ஆபிஸ், நீதிமன்ற குடியிருப்பு வளாகம், ராம் நகர் முதல் வீதி முதல் ஏழாம் வீதி வரை, சிவகங்கை ராஜா ரோடு, விஸ்வநாதன் நகர், தாணிச்சாஊரணி ரோடு, ஹவுஸிங் போர்டு, கண்டதேவி தாழையூர் ரோடு, அருணகிரி பட்டினம், நேரு தெரு, சிவன் கோவில், செப்பவயலர் தெரு, இரவு சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.