நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் போடி அருகே மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்தார். அதன்படி தனது கட்சிக்காரர்களுடன் இணைந்து சீமான் மாடுகளை அழைத்துக் கொண்டு மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக புறப்பட்டு சென்றார். அனுமதி இன்றி போராட்டம் நடத்த முயன்ற சீமானை போலீசாரும் வனத்துறையினரும் தடுத்து நிறுத்தியதால் சீமான் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் மாடு மேய்க்கும் போராட்டத்தின் போது சீமான் கூறியதாவது, கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். கூரிய கொம்புகள் இருந்தும் மாட்களால் போராட தெரியவில்லை.

கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப்பகுதியில் வனப்பகுதியும் இருக்கும். வனப்பகுதியில் காட்டு தீ பரவுவது தடுக்கப்படும். மலைகளைக் காக்க வேண்டும் என்றால் ஆடு மாடு மேய வேண்டும். நீரின்றி அமையாது உலகு எனில் ஆடு மாடு இன்றி அமையாது காடு. இலங்கையில் நடந்ததை போல தமிழகத்திலும் இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் குண்டுகளை வீசி இனப்படுகொலை செய்தனர். தமிழகத்தில் குடிக்க வைத்து இன படுகொலை செய்கின்றனர். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படுகிறார்கள் என சீமான் ஆதங்கமாக பேசியுள்ளார்