தேனிலவிற்காக அந்தமான் தீவிற்குச் சென்ற தம்பதியரிடையே ஏற்பட்ட அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணம் முடிந்து வெறும் 45 நாட்களே ஆன நிலையில், தேனிலவு அனுபவம் ஒரு பெண்ணிற்கு நரகமாக மாறியுள்ளது.

அந்தமானில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது, மனைிக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த கணவன், மனிதாபிமானமற்ற முறையில் தனது மனைதியை முகம் மற்றும் உடல் பகுதிகளில் கைமுஷ்டிகளாலும், கால்களாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளதுடன், அவளது கழுத்தை நெரித்துக் கொல்லவும் முயன்றுள்ளார்.

அறையில் இருந்து வந்த அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த விடுதி ஊழியர்கள், உடனடியாகத் தலையிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றினர். இவர்களின் சரியான நேரத்திலான தலையீட்டால்தான் அந்தப் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் கோரக்பூர் திரும்பிய நிலையில், அவரது புகாரின் அடிப்படையில் கணவன் மற்றும் மூன்று மாமனார் வீட்டு உறவினர்கள் மீது காவல்துறை தரப்பில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

“>

 

இயற்கை நிகழ்வான மாதவிடய்யைக் காரணம்காட்டி ஒரு பெண் மீது நிகழ்த்தப்பட்ட இந்த மிருகத்தனமான தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.