பாஜகவுடன் இடையிலான நட்பு முறையில் பிறழ்வு ஏற்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். இதற்காக அவர் நேரடியாக கடிதம் எழுதி அனுப்பியும், பிரதமரை சந்திக்க வாய்ப்பு பெற முடியவில்லை.
இதனால் கடும் வருத்தத்துடன் இருந்த ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த முடிவு, தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “ஓபிஎஸ் என்னிடம் நேரில் அல்லது தொலைபேசியில் பேசி இருந்தால், பிரதமரை சந்திக்க சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பேன்” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “நாகேந்திரனை 6 முறை தொலைபேசியில் அழைத்தும், அவர் எதையும் எடுக்கவில்லை. நான் முயற்சி செய்ததும் உண்மைதான்” என கூறி, அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை நேரடியாக செய்தியாளர்களிடம் காட்டினார். இந்த குறுஞ்செய்திகள் கடந்த ஜூலை 24, ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில் அனுப்பப்பட்டதாகவும் ஓபிஎஸ் கூறினார்.
அதற்குப் பதிலாக, நாகேந்திரன் “ஓபிஎஸ் என்னையோ அல்லது எனது உதவியாளரையோ அழைக்கவில்லை. செல்போனில் காண்பிக்க வேண்டாம்; ஆதாரமாக கொடுத்து காண்பியுங்கள்” என சவாலான பதிலை வழங்கினார்.
மேலும் இதே விவகாரம் குறித்து பேச தயாராக இருந்த நாகேந்திரனை மேலும் நயினார் நாகேந்திரன் பேச தயாரானபோது பிறகு பேசலாம் எனக் கூறி அண்ணாமலை அழைத்துச் சென்றார். . இதனால், ஓபிஎஸ் – நயினார் நாகேந்திரன் இடையே ஏற்பட்ட மோதல், பாஜக கூட்டணியில் உள்ள உட்பகையை வெளிப்படுத்திஉள்ளது.
