திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது:

“கரூர் சம்பவத்திற்கு பிறகு, கரூர் மக்களே தற்போது தளபதி விஜய் பக்கம் உள்ளனர். ஆனால், அவரின் கட்சியில் உள்ள நிர்வாகிகள் அவருடன் இல்லை. கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கூட விஜய்மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கைக்காக விஜய் ஏதாவது செய்ய வேண்டும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் விஜய் தலைமையில் உள்ள கூட்டணி பொருத்தமாக இல்லை. ஆந்திர மாநில துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாணை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழகத்தில் ஆட்சிமாற்றத்துக்காக விஜய் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்,” எனக் கூறினார்.

அவரது இந்த கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை இணைக்க முயற்சி செய்வதாக தகவல் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.