தமிழகத்தின் கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 21) மிக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.

இதனையடுத்து, அங்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் IMD எச்சரித்துள்ளது. பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்