தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஈரோட்டில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ள நிலையில் செங்கோட்டையன் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் தளபதி விஜய் தான் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் பேசினார். அவர் பேசியதாவது, விஜய் மீதான நம்பிக்கையில் தான் என்னுடைய IRS பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளேன். நான் விஜயுடன் நெருங்கி பழகியவன் என்றார்.

அதன்பிறகு சீமா அகர்வாலை தமிழகத்தின் டிஜிபி ஆக நியமிக்காதது ஏன் என கேள்வி எழுப்பி அவர் சீமா அகர்வாலுக்கு ஏன் உயர் பொறுப்பு வழங்கப்படவில்லை என்றும் கேட்டார். வெல்லும் தமிழ் பெண்கள் என நிகழ்ச்சி நடத்தினால் மட்டும் போதுமா என கேள்வி எழுப்பிய நிலையில் சீமா அகர்வாலுக்கு டிஜிபி பொறுப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தின் அடுத்த டிஜிபி போட்டியில் சீமா அகர்வால் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியான இவர் பல்வேறு உயர் பதவிகளை பெற்று தற்போது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் டிஜிபியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.