தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் சற்று முன் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் கலந்து கொண்டுள்ள நிலையில் விஜயின் பேச்சை அவர்கள் கேட்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த பொதுக்குழு கூட்டத்தில் செங்கோட்டையன் நடிகர் விஜய்க்கு வரவேற்பு கொடுத்த நிலையில் தற்போது கூட்டத்தில் அவர் பேசினார். அவர் பேசியதாவது, தலைவரை பொறுத்தவரையில் மனிதநேயமிக்கவர், நல்லவர், வல்லவர், உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆண்டுக்கு 500 கோடி வருமானம் தேவையில்லை என்று விட்டு விட்டு உங்களுக்காக சேவையாற்ற வந்துள்ளார். கொங்கு நாட்டின் தங்கம் பெரியார் பிறந்த மண்ணில் தமிழக வெற்றி கழக தலைவர் வந்திருக்கிறார்.

நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது புரட்சித்தளபதி விஜய் தான். நீங்கள் திரண்டு வந்தால் நாடே தாங்காது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறார்களோ அவர்கள் தான் வேட்பாளர்களாக நிற்பார்கள். என்னை பொறுத்தவரையில் இது தீர்ப்பளிக்கிற கூட்டம். நீங்க தீர்ப்பளிக்கிற கூட்டம் மட்டுமல்ல நீங்கள் திரண்டு வந்தால் இந்த நாடு கூட தாங்காது. நாளை தமிழகத்தின் முதலமைச்சர் என்ற புதிய வரலாற்றை விஜய் பதிக்க போகிறார். நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது புரட்சித் தளபதி தான் இதை யாராலும் மாற்ற முடியாது. ஏழை எளிய மக்களின் கண்ணீரை துடைக்கும் கனவு நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக கண்டிப்பாக விஜய் ஆக்குவோம் என்றார்.