இங்கிலாந்தை சேர்ந்த பெண் சாரா வில்கின்சன்.  42 வயதான இவர் ஆண்களை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாத நிலையில் சமீபத்தில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இந்த   திருமண நிகழ்ச்சிக்கு ஏராளமான விருந்தினர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு பிரமாண்ட விருந்தும்  அளிக்கப்பட்டது.

அதாவது இந்திய மதிப்பில் மொத்தம் ரூ. 10 லட்சம் செலவில் சஃபோல்க்கில் உள்ள பெலிக்ஸ்டோவில் உள்ள ஹார்வெஸ்ட் ஹவுஸில் இந்த திருமண விழா நடைபெற்றது. சரியான வாழ்க்கை துணை கிடைக்கவில்லை என்றாலும் தனது கனவு திருமணத்திற்காக 20 ஆண்டுகளாக பணத்தை சேமித்ததாக அவர் கூறியுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.