ஆப்கானிஸ்தான் நாட்டில் அக்டோபர் 7 அன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் எட்டு சக்திவாய்ந்த நில அதிர்வுகள் ஹெராட்டின் பகுதியை உலுக்கியது. இதனால் கிராமப்புற வீடுகள் இடிந்து விழுந்தது மற்றும் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் வடமேற்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானின்  மேற்கு மாகாணத்தின் தலைநகரான ஹெராத் நகரத்திலிருந்து 33 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று USGS தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 12,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என யுனிசெஃப் புதன்கிழமை தெரிவித்துள்ளது.