தனுசு ராசி அன்பர்களே,

இன்று நேர்பட பேசுவீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். அவசரப்பணிகள் உங்களுக்கு இருக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள். இந்த நாள் உங்களுக்கு இனிய கனவுகள் ஏற்படும். முன்னேற்றம் காண்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வெளிவட்டார பழக்க வழக்கம் நல்லபடியாக அமையும். சுயதொழில் மேற்கொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்கும். கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேற்றுமை ஏற்படும். இன்று பெண்கள் கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். கணவனுடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் சரியாகும். இன்று மாணவர்கள் புரிதல் உணர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கல்வித்தரத்தை புரிந்து கொள்வீர்கள். படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். லட்சிய நோக்குடன் கல்வி அமையும். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு 
அதிஷ்ட எண்: இரண்டு, ஐந்து மற்றும் ஏழு 
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்