மகர ராசி அன்பர்களே

இன்று துணிவுடன் செயல்படுவீர்கள். உங்கள் செயல்களினால் வெற்றி கிடைக்கும். எதிர்மறையாக பேசுபவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஆரவார தன்மையை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்ப உறுப்பினர் கூடுதல் பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாளாக உள்ளது.

இன்று சங்கிலி தொடர் போல் வந்த கடன் சுமை படிப்படியாக குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.இன்று எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும் .திடீர் பணநெருக்கடி ஏற்பட்டாலும் சரியாகிவிடும்.  கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் .

இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். எந்த செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.இன்று மாணவர்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். எதையும் பொறுப்புடன் செய்ய பாருங்கள். எதிலும் அவசரப்பட வேண்டாம். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  :  7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்  :  பச்சை மற்றும் மஞ்சள் நிறம்