விருச்சிக ராசி அன்பர்களே,

இன்று கனவுகள் நினைவாகும் திட்டமிட்ட பணிகள் எளிமையாக நடந்து விடும். சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க கற்றுக் கொள்வீர்கள். பொருளாதாரத்தை சிறப்பாக உயர்த்திக் கொள்வீர்கள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்து காட்டுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகிச் செல்லும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திடீர் கோபம் கொஞ்சம் வரலாம். நிதானமாக பேசுவது நல்லது.

பெரிய அளவில் பிரச்சனை இருக்காது. திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். கடனின் ஒரு பகுதி அடைபடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த நாள் முழு முயற்சியினால் முன்னேற்றம் காணலாம். இன்று பெண்களுக்கு விட்டுப்போன உறவுகள் மீண்டும் வரும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள் பிரச்சனைகளை துல்லியமாக ஆராய்ந்து வெற்றி பெறுவீர்கள்.

இன்று மாணவர்களுக்கு மதிப்பு மரியாதையும் கூடிவிடும். எதை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். சிந்தித்து எடுக்கும் முடிவுகளினால் வெற்றியைப் பெறுவீர்கள். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் மற்றும் நீல நிறம்