இந்தியாவில் பைக்கிலேயே தனியாகப் பயணம் செய்து வரும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மீக் ஹிஜ்மேன் என்ற இளம்பெண்ணுக்கு, ஒரு நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாகப் பைக்கின் டயர் பஞ்சராகி பெரும் சிக்கல் ஏற்பட்டது.

மொழி தெரியாத ஊர், ஆள் அரவமற்ற சாலை என பயத்தில் உறைந்துபோன அந்தப் பெண், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Meike 🇳🇱 | Solo Female Travel (@meikehijman)

அப்போது அந்த வழியாக வந்த மூன்று இந்திய இளைஞர்கள், அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு உடனடியாகத் தங்கள் வண்டியை நிறுத்தி உதவிக்கு முன்வந்தனர்.

தற்காலிகமாக டயரைச் சரிசெய்தது மட்டுமின்றி, அவரை அருகில் இருந்த மெக்கானிக் ஷாப் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று உதவி செய்துள்ளனர்.

இந்தியர்களின் இந்த மனிதாபிமானச் செயலை வீடியோவாகப் பகிர்ந்த அந்தப் பெண், “அவர்கள் எனக்காக நின்றார்கள்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “இதுதான் உண்மையான இந்தியா” எனப் பலரும் பெருமிதத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.