மும்பை பைதுனி பகுதியில் வசித்து வந்த டோகாடியா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், தர்பூசணி பழம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்துல்லா, அவரது மனைவி நஸ்ரின் மற்றும் இரண்டு மகள்கள் என ஒரு குடும்பமே ஒட்டுமொத்தமாகப் பலியான நிலையில், அவர்களின் உடலில் ‘ஜின்க் பாஸ்பைட்’ (Zinc Phosphide) எனப்படும் எலி கொல்லி மருந்து கலந்திருப்பது தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பழத்தில் எப்படி விஷம் கலந்தது எனத் திணறிய போலீசாருக்கு, தற்போது தர்பூசணி மீது தூவப்பட்ட சாட் மசாலா அல்லது உப்பில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தர்பூசணியின் சுவையை அதிகரிக்கத் தூவப்படும் மசாலாவே எமனாக மாறியதா? அல்லது இது திட்டமிடப்பட்ட கொலையா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மம் விலகாத இந்த மரணங்கள் மும்பை மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
