தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஸ்வின் ககுமனு. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நடுநீசி நாய்கள் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏழாம் அறிவு, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் பிரியாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இறுதியாக இவரின் நடிப்பில் பொன்னியின் செல்வன் படத்தில் செந்தன் அமுதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சோனாலி மணவாளன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.