இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ் பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது சவுத் ஆப்பிரிக்காவில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஒரு பெரிய பவுலில் தன் கைகளால் தாளம் போடும் ஒரு வீடியோவை கமல்ஹாசன் ரிதம் செக்சன் என்ற பெயரில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் பல திறமைகளை கொண்டு முன்னணி கதாநாயகராக ஜொலிக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது கைகளால் தாளம் போடும் வீடியோ ‌ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)