தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. இவர் அஜித் நடிப்பில் வெளியான உன்னை தேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன்பிறகு கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு என்ற பாடலில் நடனமாடியதன் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் மாளவிகா.

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த மாளவிகா கடந்த 2007-ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார். இந்த தம்பதிகளுக்கு ஆரவ் என்ற மகனும், ஆன்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை மாளவிகாவின் குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.