அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மழை வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஒரு பக்கமும் துணை முதல்வர் மற்றொரு பக்கமும் போட்டோ சூட் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்னை வெறும் 3 மணி நேர மழைக்கே தாக்குப் பிடிக்கவில்லை என்று youtube களில் சொல்கிறார்கள்.

ஆனால் அது செய்திகளில் வெளி வருவதில்லை. மதுரையில் 16 சென்டிமீட்டர் பெய்த மழையால் இருவர் உயிரிழந்துள்ளனர். மழைநீர் வடிந்த பிறகு தான் மேயர் வந்து நேரில் பார்வை இடுகிறார். இங்கு இருக்கக்கூடிய வணிகவரித்துறை அமைச்சர் அவருடைய துறையை மட்டும் தான் கவனித்துக் கொள்கிறார்.  இந்த அரசு கமிஷன் மற்றும் கரெப்ஷென் ஆக செயல்பட்டு வருகிறது. மழையின் ஆரம்ப நிலையிலேயே மதுரை தத்தளிக்கிறது என்றார். மேலும் தமிழக அரசின் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆளுநர் ரவி பாராட்டியதையும் செல்லூர் ராஜு விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.