பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஆசிரியை ஒருவர், சிறிய குழந்தைகளை மிகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு ஆசிரியை மாணவர்களிடம் கேள்வி கேட்கிறார்; அதற்குப் பதில் தெரியாததால் ஆத்திரமடைந்த அவர், கைகளாலும் கைத்தடியாலும் அந்தக் குழந்தையைத் இரக்கமின்றித் தாக்குகிறார். ஒரு குழந்தையை அடித்துவிட்டு, அவன் இருக்கைக்குச் சென்றதும் அடுத்த குழந்தையையும் அதேபோலத் தடியால் விளாசுகிறார்.
இந்த வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் அந்த ஆசிரியையின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
स्कूल में मासूम बच्चों की पिटाई करना
क्या उचित है…!महिला शिक्षिका के रवैये पर आप क्या विचार रखते हैं कमेंट में बताइए…? pic.twitter.com/1CFMwUauu1
— Rahul Saini (@JtrahulSaini) April 26, 2026
“>
“இவ்வளவு சிறிய குழந்தையை இப்படியா அடிப்பது? இந்த ஆசிரியையை உடனே வேலையை விட்டு நீக்க வேண்டும்” என்றும், “அந்தக் குழந்தையின் பெற்றோர் இந்த ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பலரும் ஆவேசமாக கமெண்ட் செய்து வருகின்றனர். ‘
X’ தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 28,000-க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலையை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
