தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் நாளை தஞ்சையில் நடைபெற உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து அதிரடியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட 4,900 நிர்வாகிகள் மட்டுமே வர வேண்டும் என்றும், அவர்கள் அனைவரும் க்யூஆர் (QR) அனுமதி சீட்டு வைத்திருப்பது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் யாரும் வரவேண்டாம் எனத் தலைமை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு நிர்வாகிகள் அமரும் இடத்தில் பிரம்மாண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அவசர மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெகவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால், தஞ்சை மாவட்டமே தற்போது தவெக தொண்டர்களின் வருகையால் களைகட்டியுள்ளது.
