மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, தற்போது தீவிர அரசியலில் குதித்துள்ள நிலையில் அவரது அடுத்தடுத்த மூவ்-கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தனது புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்த சசிகலா, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் முக்கியமான இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் உடனடியாக கொடிக்கம்பங்களை நட்டு, புதிய கொடியை பறக்கவிடுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மார்ச் 5-ம் தேதிக்குள் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க சசிகலா திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தமிழகம் முழுவதும் தனது பலத்தை நிரூபிக்க அவர் தயாராகி வருகிறார்.
போயஸ் கார்டனில் இருந்து பறந்த இந்த உத்தரவால் சசிகலா ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், அதிமுகவின் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பு இந்த நகர்வை மிகுந்த கவனத்துடன் கவனித்து வருகிறது.
