தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவரும் திமுகவின் தீவிர ஆதரவாளருமான நடிகர் சத்யராஜ் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது, இதற்குப் பெயர்தான் உண்மையான திமுக மேடை.
வெறும் கைதட்டல்களைப் பெறுவதற்காக வெற்று வசனங்களைப் பேசும் இடமல்ல இது. கொள்கைகளைப் பற்றிப் பேசும் மேடை. அத்தகைய வெற்று வசனங்களை யார் வேண்டுமானாலும் பேசலாம், அதற்கு வேறு மேடைகள் உண்டு. அதையெல்லாம் ‘வெட்டி உதார்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நடிகரும் தங்கள் பாணியில் அதனைச் செய்ய முடியும்.”
https://www.instagram.com/stories/sibi_sathyaraj/3844719778066525481?utm_source=ig_story_item_share&igsh=MWV5OWhmZXBzdzUyZg==
“ஆ.ராசா போன்ற திமுக தலைவர்களின் பேச்சைக் கேட்டால் அறிவு வளரும். ஆனால், வெறும் சினிமா பாணி வசனங்களைக் கேட்பதால் அறிவு வளராது, வேண்டுமானால் சிறிது நேரம் பொழுதுபோக்காக (ஜாலியாக) இருக்கலாம். இது காலங்காலமாக நடந்து வரும் ஒன்று.”
“திரைப்படங்களுக்கு தணிக்கை துறை விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் பேசினார். ‘தோழர் சேகுவரா’ என்ற படத்திற்கு தணிக்கை குழுவினர் கடும் நெருக்கடி கொடுத்தனர். முந்தைய காலங்களில் ‘உதயசூரியன் பார்வையிலே’ என்ற வரிகள் வந்தாலே நீக்கிவிடுவார்கள்.
View this post on Instagram
அதேபோல், ‘தோழர் சேகுவரா’ படத்தில் ‘அண்ணாதுரை’ என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தை ‘அய்யாதுரை’ என்று மாற்றச் சொன்னார்கள்” என சத்யராஜ் கூறினார். இதில் நடிகர் விஜய்யை அவர் மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது விஜய்க்கு ஆதரவாக அவரது மகன் சிபி சத்யராஜே அப்பாவுக்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.
அதாவது சத்யராஜின் அரசியல் பட டயலாக்கை பகிர்ந்து நடிகர் விஜய் 2 வருஷத்துக்கு முன்னாடி அரசியலுக்கு வரல 25 வருஷத்துக்கு முன்னாடியே மக்கள் நல பணிகளில் ஈடுபட்டு விட்டதாக தன்னுடைய இன்ஸ்டாவில் சிபி சத்யராஜ் ஸ்டோரி போட்டுள்ளார்.
நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா சத்யராஜ் ஆகியோர் திமுக ஆதரவாளர்களாக இருக்கும் நிலையில் சிபி சத்யராஜ் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளராக இருக்கிறார்.
மேலும் இந்த நிலையில் தன் அப்பாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது டயலாக் மூலமே சிவபி சத்யராஜ் போட்ட ஸ்டோரி தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.
